இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பு!

படம்
ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம் , தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது ஆகும். மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், வழங்கும், 'உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பில் இணைந்து, நாங்கள் அளிக்கும் பத்து நிலை படிப்புகளில் நீங்கள் விரும்பும் அளவிற்கான நிலைகளை மட்டும் படிக்கலாம். பத்து நிலைகளையும் படிப்பது உங்கள் விருப்பம். பத்து நிலை படிப்பை முடித்தால்  மந்திரம் கலைவளவன்  என்கிற சான்றிதழ்' வழங்கப்படும்.  மந்திரம் படிப்பில் இணைந்து முதல் பாடத்தைப் புரிந்து கொண்டதுமே, கடவுளில் உங்களுக்கு ஓர் இடம் உருவாகி, உங்கள் முன்னேற்றத்தின் முதல் படி உங்களுக்குத் தென்படத் தொடங்கும். மந்திரம் கலைவளவன்  என்கிற சான்றிதழ் பெறும் வகைக்குப் பத்து நிலைகளையும்  படித்தவர்கள், உங்கள் உறுதியான முன்னேற்றத்தைக் கட்டமைப்பதோடு, ஆர்வமுள்ள நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் முன்னேற்றப் பயிற்சி அளிக்க முடியும்.  முதலாவதாக நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூபாய் இருநூற்று முப்பதுக்கு முதல் ஐந்து பாடங்கள் கிடைக்கும். முதல் பாடத்தை படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையெழ...