குறள் எண்: 391 அதிகாரம்: கல்வி


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

குமரிநாடன் உரை:

    தனக்கான அசையும், அசையா, மற்றும் அறிவுசார் உடைமைகளை (கற்பவை) அயல் எதுவும் இல்லாமல் (கசடற) கற்க வேண்டும் (கற்க). அந்த உடைமைகளை அயலுக்கு இழக்காமல் (அதற்குத் தக) நிலைபெற்று வாழவேண்டும். (நிற்க)

விளக்கம்: 

    கசடு என்பது எந்தவொரு பொருளிலும் கலந்திருக்கிற அயல் பொருள் ஆகும். 

    வெண்ணெய்யைக் காய்ச்சுகிற போது அதில் கலந்து இருக்கிற மோரின் நீர்ப்பொருள் ஆவியாகிவிடும். மோரில் கலந்திருக்கிற, கொழுப்பு இல்லாத ஆடை போன்ற பொருள்கள் கசடாக அடியில் தங்கிவிடும்.  

    நமக்குத் தேவை நெய் என்கிற உடைமை. வெண்ணெய்யில் கலந்திருந்த அயலில் கொஞ்சத்தை ஆவியாக்கி களைந்து விட்டோம். வெண்ணெய்யில் கலந்திருந்த அயலில் மற்றது கசடாக நெய்யின் அடியில் தங்கியுள்ளது. 

    கசடு இல்லாத நெய் மட்டுமே நமக்கான தேவை போல, நம் கற்றலுக்கு, ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழிகளோ, பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள். மார்க்சியம் போன்ற எந்த அயல் இயல்களோ  இல்லாத,  தமிழும் தமிழியலுமே தேவை.

    தமிழையும் தமிழியலையும் கற்றபின் அதை எப்போதும் அயலுக்கு இழக்க வண்ணம் நிலைபெற்று வாழவேண்டும்.

    தமிழியல் என்பது, தமிழர்தம் அசையும், அசையா, மற்றும் அறிவுசார் உடைமைகளோடு வாழும் வகைக்கான வாழ்க்கை முறை ஆகும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பு!

சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்

ஐந்திணைக் கோயிலில் உறுப்பினராக இணைவீர்!