கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டு படிப்பு
கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டுகால படிப்பை, மந்திரம் இணையவழிக் கல்விக்கூடத்தில் இணைந்து படிக்க முடியும். அதில்
1. கணியம் கலைவளவன்
2. மந்திரம் கலைவளவன்
என்கிற இரண்டு வகையான படிப்புகளில் இணைந்து படிக்க முடியும்.
நீங்கள் விரும்பிய கலைவளவன் படிப்பில் இணைந்து படிக்க, இணைப்பில் சென்று, கிடைக்கும் படிவத்தை உங்கள் செல்பேசி மூலமாகவே தமிழில் நிறைவு செய்து ஒப்படைக்கலாம்.
அத்துடன் முதலாவது பாடத்திற்கான படிப்புக் கட்டணம் ரூபாய் ஐம்பதை, kumarinadanr@okicici என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு செலுத்தலாம்.
அப்போது நீங்கள் விரும்பும் ஓராண்டு கலைவளவன் தலைப்பு படிப்பில் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள்.
நாங்கள் முதல் பாடம் அனுப்பி, அதற்கு நீங்கள் அனுப்பிய விடைக்கு, ஐந்திணைக்கோயிலின், மதிப்பெண் மற்றும் பாராட்டை உங்கள் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பயதும்- முதலாவது பாடத்திற்கான எங்களின் பயிற்றுக்கடமை முடிந்துவிடும்.
மேலும் படிப்பைத் தொடர அடுத்தடுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய் ஐம்பதைச் செலுத்தி நீங்கள் படிப்பைத் தொடரலாம்.
கலைவளவன் தலைப்பிற்கு ஐம்பது பாடங்களில்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய் ஐம்பது கட்டணம் ஆகும்
படிப்பின் ஐம்பது பாடங்களையும் முடித்தவர்களுக்கு நீங்கள் படித்த வகைப் படிப்பிற்கான கலைவளவன் தலைப்பிற்கான சான்றிதழ் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
நாங்கள் அனுப்பும் பாடங்களின் தலைப்புகள்:
1. நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!
2. நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! யாரும் உங்கள் தலைஎழுத்தில் மாற்றம் செய்ய இயலாது.
3. உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி?
4. இறத்தல், காலமாதல் என்கிற பொருள் பொதிந்த சொற்களில்! உடல் இறையாகிறது. உயிர் காலமாகிறது என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர்.
5. நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு! நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு.
6. இறை குறித்த வினாக்களும் விடைகளும்.
7. கடவுளிடம் நீங்கள் உருவாக்கிய உங்கள் சொந்தஇடமே உங்கள் அதிகாரம்.
8. கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே.
9. கடவுள் குறித்த வினாக்களும் விடைகளும்.
10. இயல்கணிப்பு.
11. இயல்கணக்கும் இயல்அறிவும்.
12. தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திரம்! உலகினர் வாழ்க்கை நெறி கிறித்துவம், முகமதியம், பௌத்தம், சமனம், சீக்கியம், ஹிந்துத்துவம் என்கிற மதங்கள்.
13. தையில் பொங்கல் திருவிழா!
14. மனம்! மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன்.
15. ஆன்மா- வேறுஉடல் பெற்றுவிடுவதாக சொல்கிறார்களே. அவ்வாறிருப்பின் திதி கொடுப்பதால் எவ்வாறு பலன் கிடைக்கிறது?
16. 'நிமித்தம்' பாதுகாப்புக்கான விசும்பின்ஆற்றுப்படுத்தல் என்கிற தமிழ்முன்னோரின் இயல்கணிப்பு!
17. உங்களுக்குக் கிடைக்கிற நன்மைகள், தீமைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் ஆற்றல் மூலம் எது!
18. சுழியம் என்பது இல்லாததைக் குறிப்பதன்று! இருந்து இல்லாமல் போனதைக் குறிப்பதாகும்.
19. உங்கள் பெயரோடும், உங்கள் சொந்த மொழியோடும், குலதெய்வங்களின் வலுவான பிணைப்பு!
20. மந்திரம்.
21. மந்திரம் என்பது மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல்!
22. பயணத்தின் போது கட்டாயம் முன்னெடுக்க வேண்டிய மந்திரம்.
23. இது உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான, ஐந்திணைக் கோயில் வடிவமைத்துக் கொண்டாடியிருக்கும் முழுமையான மந்திரம் ஆகும்.
24. முன்னோர்களுடன் பேச முடியுமா!
25. கடவுளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட முதலாவது மனிதமொழி!
26. யார் சிறப்பாக வாழ்கிறார்கள்?
27. நிமித்தகம் நம்முடையதெனக் கொண்டாடுவோம்! முன்னேற்றத்திற்கு அதன் மேம்பாடுகளில் களமாடுவோம்.
28. பெயரே முதல் அடையாளம்! புரிந்து கொள்ள வேண்டும்.
26. மனிதன் எவ்வளவோ கண்டுபிடிக்கிறான், ஏன் இறக்காமல் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை?
30. மறுபிறப்பு.
31. விதி என்றால் என்ன? வாழ்க்கை விதிப்படிதான் அமையுமா? இளம் அகவை இறப்புகள் எதனால் ஏற்படுகின்றன? அதற்கு விதி காரணமா? தலைஎழுத்து விதி ஒன்றா?
32. எளிதாகக் கிடைத்துவிடும் மாற்றமும் முன்னேற்றமும்! நம்முடைய வாழ்க்கை பற்றி நாம் கொண்டிருக்கிற கணிப்பை மாற்றிக் கொண்டாலே.
33. தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
34. கொண்டாடுவோம்! முந்தை எழுபிறப்பை. எட்டுவோம் உச்சம்! பிந்தை எழுபிறப்பில்.
35. கடவுள் சாமி என்பன- பொய் என்று நினைக்கிறேன். என் எண்ணம் சரியா? தவறா?
36. உடைமை! நிலையானது. நமக்கு மட்டுமல்ல நமது ஏழேழு தலைமுறைக்கும் தொடரக் கூடியது.
37. கோயில்களில் வழிபாட்டு அடையாளமாக இருப்பது நடுகல்! நடுகல் வழிபாடே நமது தமிழர் வழிபாடு.
38. நல்லது உண்மை அல்ல; நிழல். கெட்டதும் உண்மை அல்ல.
39. கடவுளிடம் உங்களுக்கு அமைந்த சொந்த இடத்தை எளிதாகப் பற்றிக் கொள்ள.
40. உறுதியாக முடியும்! தமிழ்நாட்டைப் பார்த்து வியக்கும் வகைக்கு உலகை திருப்ப. அயலியல்களை விட்டு வெளியேறும் ஓர்அயிரம் தமிழர்போதும்.
41. ஆன்மீகம் என்பது தமிழா! தமிழில் என்னவென்று சொல்லலாம்?
42. மனிதனுக்கு ஆறறிவு, விலங்கினங்களுக்கு ஐந்தறிவு, அப்படியானால் மரம், செடி, கொடிகளின் அறிவு என்ன?
43. எந்தச் செயலைச் செய்ய தொடங்கினாலும் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்குவதன் காரணம் என்ன?
44. உயிர் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்றா? வேறு வேறா?
45. மிகமிகச்சிறிய அளவேனும் வளர்ந்தே ஆகவேண்டும்! நேற்றைவிட இன்று.
46. தமிழன் தனக்கான சொந்த வீட்டையும், தன் இனத்திற்கான சொந்த நாட்டையும் பற்றிட, பாடாற்ற வேண்டியது என்ன? ஏன்
47. மனிதனின் வாழாண்டு!
48. கடவுள் நமது வேண்டலை நிறைவேற்றித்தர ஏதாவது கேட்குமா? அப்படியான கேட்பு இயல்பானதா?
49. பக்தியுடன் கடவுளை வேண்டினால் கேட்ட வரம் கிடைக்கும் என்று ஏன் நம்மால் உறுதியாக கூற முடியவில்லை?
50. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிறப்பான ஐந்து வழிகள் என்னனென்ன?
கருத்துகள்
கருத்துரையிடுக