இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்தலைவி, எனக்குக் கிடைத்த உயிர்மையும் கடவுள்பேறும் ஆவாள்! இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை என்கிற புரிதல் வரிசையில்

படம்
இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான இயக்கத்தையும் தருகிறது என்கிற விரிவிற்கு உரிய, ' இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை ' என்கிற கண்டுபிடிப்பின் தலைப்பை, என் புலமை ஆதாயமாக (அறிவுசார் சொத்துரிமை) தொடர்ந்து பதிவிட்டு வரும் வரிசையில், நான் உருவாக்கிய கட்டுரையே, என் தலைவி எனக்குக் கிடைத்த முதன்மையான கடவுள்பேறு! என்கிற இந்தக் கட்டுரை ஆகும். ஐம்பொழுது: 1.கிழமை: வெள்ளிக்கிழமை 2.நாள்: 12 3.மாதம்: ஆனி 4.தமிழ்த்தொடராண்டு: 5128 5.தமிழ்த்தொடர்நாள்: 1872752 1. முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவிய, இருமைக் கோட்பாட்டிற்குச் சொந்தக்காரர்கள்: மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நாவலந்தேய இந்தியாவில் வாழ்ந்திருந்த அத்தனைத் தமிழர்களும் ஆகிய தமிழ்முன்னோர்கள்.  2. வெளி என்கிற இடத்தின் அடிப்படை இயல்பு: இயக்கமின்மை. அதற்கு அ.வெளி ஆ.விண்வெளி இ.விசும்பு என்கிற மூன்று நிலைகள் உண்டு. 3. காலம் என்கிற பேரளவான தனி ஒன்றுகளுக்கு எண்ணிக்கை உண்டு. தான்தோன்றி இயக்கம் உண்டு. வளர்ச்சியும் உண்டு. 4. தனி ஒன்றுகளின் அடுத்த கட்ட வளர்ச்ச...

மீண்டும் மந்திரம் புழங்க!

படம்
ஐம்பொழுது: 1.கிழமை: வியாழக் கிழமை 2.நாள்: 11 3.மாதம்: ஆனி 4.தமிழ்த்தொடராண்டு: 5128 5.தமிழ்த்தொடர்நாள்: 1872751 தமிழ்முன்னோர் நிறுவி, 3500 ஆண்டுகளுக்கு முன்னர், பேரளவாகப் புழக்கத்தி்ல் இருந்த முன்னேற்றக்கலையே மந்திரம். ஆனால் நடப்பில் ஒட்டுமொத்த தமிழினமும் மந்திரம் என்கிற தமிழியலைப் புறந்தள்ளி பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்கிற வேறுவேறு அயல்இயல்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இடையிடையே மந்திரம் மீட்பு முயற்சி, மனிதனில் இயங்கும் அயலியல் வகையாக, அவ்வப்போது நடந்துதாம் வந்திருக்கிறது. கூட்டம் கூட்டமாக ஆதரவுத்தளமும் உருவாகியிருந்திருக்கிறது, என்பதைத் தெரிவித்து நடப்பில் தமிழறிஞர்.குமரிநாடன் ஆகிய எனது மந்திரம் மீட்பு முயற்சியை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கடவுளில் இயங்கும் மந்திரம் வகையாக, கடவுளே! விசும்பு தெய்வமே அருள்செய்க என்று வேண்டும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. தமிழறிஞர்.குமரிநாடன் ஆகிய எனது மந்திரம் மீட்பு முயற்சிக்கு, இயற்கை நுண்ணறிவான கடவுள் கேட்பை, செயற்கை நுண்ணறிவான யாழிடமும் பதிவிடுவது அந்த நோக்கத்திற்கான நான் முன்னெடுக்கும் தவம் ஆகும்....

மனம்! மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன்

படம்
மனத்திற்கும், அறிவிற்கும்- பல்வேறுமத அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில் மகத்துவம் கற்பிக்கிற போக்கால், தேவைக்கானவைகளை கற்க மறுதளிக்கப்படுவதும், தேவையில்லாதவைகளை வலிந்து கற்பிப்பதும் மன உளைச்சலுக்கான அடிப்படை என்கிற நிலையில்- எளிமையாக உருவாக்கிக் கொள்ள முடிகிற மனஉறுதியும், எளிமையாக அகற்றிக் கொள்ள முடிகிற மன உளைச்சலும் எட்டக்கனிபோல பீற்றிக்கொள்ளப்படுவது இந்திய மற்றும் தமிழ்ச்சமூகத்தின் இற்றை நிலையாகும். அதை அகற்றி மகிழும் வகைமைக்கானது இந்தக் கட்டுரை. மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன். மற்ற ஐந்தறிவு உயிரிகள் பெற்றிருக்கிற, ஐந்து அறிவுகளுக்கான புலன்களையும் மனிதன் கொண்டிருக்கிறான். இதை ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்று தனக்கு முந்தைய தமிழ்முன்னோர் நிறுவியுள்ளதாக தொல்காப்பியர் தெரிவிக்கிறார். மேலும், புல்லும் மரனும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே சிதலும...

மனித வாழ்க்கையின் முதன்மை நோக்கம் என்ன?

படம்
மனித வாழ்க்கையின் முதன்மை நோக்கம் என்ன என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். அந்த இரண்டில்- இடம் எனப்படுவது எல்லையும், தான்தோன்றி இயக்கமும் அற்ற வெளி ஆகும். காலம் எனப்படுவது மிக மிக நுட்பமான, மெய்யெழுத்துக்கள் என்று தமிழ் நிறுவியுள்ள க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் போன்ற மெய் ஆன, குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைந்த தனி ஒன்றுகள் ஆகும். அம்மா என்பதில் ம்ம் என்கிற இரண்டு மெய்களின் கூட்டியக்கம் அஆ என்கிற உயிரைப்பெறுகிறது.  தமிழ் என்பதில் த்ம்ழ் என்கிற மூன்று மெய்களின் கூட்டியக்கம் அஇ என்கிற உயிரைப் பெறுகிறது. மந்திரம் என்பதில் ம்ந்த்ர்ம் என்கிற ஐந்து மெய்களின் கூட்டியக்கம் அஇஅ என்கிற உயிரைப் பெறுகிறது.  இந்த உயிரைக் கொடுப்பது இடம் ஆகும். இயக்கம் இல்லாத இடத்திற்கு, காலத்தின் தனி ஒன்றுகள் இரண்டாக பலவாக இணைகிற பொழுது இயக்கத்தைக் கொடுக்கிறது. இடத்தில் காலம் கொடுத்த இயக்கம் முயக்கமாகி இடம் காலத்திற்கு கொடுக்கிற முயக்கம...

கடவுளைப் புரிந்துகொள்ளுங்கள்!

படம்
கடவுள்! உங்கள் செயல், எண்ணம், கேட்பு ஆகியவற்றால் இயக்கம் பெறுகிற இயக்கமின்மையும்,  உங்களிடம் பெற்ற இயக்கவகைக்கு மட்டுமே, உங்களுக்குக் குறிஞ்சித்திணைக் கடவுள்கூறு தெய்வம் சேயோனின் மாட்சிக்குரிய உடல் நலத்தையும்,  முல்லைத்திணை இறைக்கூறு தெய்வம் மாயோனின் மாட்சிக்குரிய மனமகிழ்ச்சியையும்,  மருதத்திணை இறைக்கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பேரளவான செல்வச்செழிப்பையும்,  பாலைத்திணை இறைக்கூறு தெய்வம் கொற்றவையின் மாட்சிக்குரிய சீரான இயக்கத்திற்கான பாதுகாப்பையும்,  நெய்தல்திணை இறைக்கூறு தெய்வம் வருணனின் மாட்சிக்குரிய பேரளவான தொடர்புகளின் ஒத்துழைப்பையும் வழங்கவல்லதும் ஆகும். வலி உங்களுக்குப் பிடிக்கும் என்றால்,  கடந்து போன வருத்தங்கள் தந்த கவலைகள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், வறுமையைப் பற்றி புலம்பியிருப்பது உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இலக்கு இல்லாத பயணம் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் குற்றம் கண்டுபிடிப்பது உங்களுக்கு பிடிக்கும் என்றால்,  அவைகளின் மாற்று வகையான உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழுமை, பயணப்பாதுகாப்பு, தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றை கட...

யார் எதைக் கேட்டாலும் கொடுப்பதுவே கடவுளின் வேலை!

படம்
யார் எதைக் கேட்டாலும் கொடுப்பதுவே கடவுளின் வேலை என்பதைத் தமிழ்முன்னோர், ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில், தௌிவாக   நிறுவியுள்ளனர். இதை நீங்கள் தெளிவாகவும், உறுதியாகவும், புரிந்து கொண்டு, உங்கள் எல்லையில்லாத முன்னேற்றத்திற்கு கடவுளிடம் நிறைய நிறையக் கேட்டுப் பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்திற்கானது ஐந்திணைக்கோயில். கடவுளே! விசும்பு தெய்வமே! என்று விளித்து, அன்றாடம், உங்கள் சின்னத்சின்னத் தேவைகளைத், தெளிவாக உறுதியாக, கேளுங்கள். கடவுள் ஒவ்வொன்றாக நீங்கள் கேட்ட அத்தனையையும் நிறைவேற்றித்தருவதைப் பார்த்து வியந்துபோவீர்கள். உங்களுக்கு கிடைத்த ஒவ்வொன்றுக்கும், கடவுளே! விசும்பு தெய்வமே! என்னுடைய இந்தக் கேட்பை நிறைவேற்றித் தந்தமைக்கு நன்றி! என்று, கடவுள் உங்களுக்காக முன்னெடுத்த முயக்கத்தைப் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்களால், கடவுளில் உங்களுக்கான சொந்த இடம், விரிவடைந்து கொண்டே போகும். அப்புறம் உங்களின் பெரிய பெரிய தேவைகளை எல்லாம், கடவுளிடம் கேட்டுப்பெறுவது மிகமிக எளிதாகிவிடும். உங்களுக்கு மட்டுமேயான, உங்கள் சொந்தக் கடவுளைக், கட்டமைத்துக்கொள்ள, விரிவாகக் கற்றுத்தரும் ந...

நூல்அறிமுகம் வரிசையில்: உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய ஐந்திர (பிரபஞ்ச) மாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்கள்

படம்
இந்தச் சிறுநூல், மந்திரத்தை யாரும், கட்டி, ஓதி பயன் பெறும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது.  நூலின் பெயர்:  உடல்நலம், மனமகிழ்ச்சி,  செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய  ஐந்திர (பிரபஞ்ச) மாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்கள் நூல் ஆசிரியர்: தமிழறிஞர்.குமரிநாடன். மந்திரம் கல்வியாளர். வெளியீடு: ஐந்திணைக்கோயில் அரசு பதிவுபெற்ற தமிழர் வாழ்வியல் வகைக்கான கல்விநிறுவனம் மின்அஞ்சல்: ainthinaikkoyil@gmail.com செல்பேசி: 9500612859   நூல்வகைப்பாடு: தமிழர் வாழ்வியல் நூலின்விலை: ரூ 95/- பதிப்பு: முதல்பதிப்பு:  17, சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5128 (30.04.2026) உரிமை: ஆசிரியருக்கே   பன்னாட்டுத் தரப்புத்தக எண்: 978-81-685265-1-8 பன்னாட்டுத் தரப்புத்தக எண்ணுக்கு பதிவிட்ட நூலின் ஆங்கிலப்பெயர்:  Mantras to Greatly Accumulate the Five Cosmic Values: Health, Happiness, Prosperity, Travel Safety, and Essential Connections. பன்னாட்டுத் தரப்புத்தக எண்ணுக்கு பதிவிட்ட நூலாசிரியரின்  ஆங்கிலப்பெயர்:  TAMIL SCHOAR. KU...