இந்தக் கட்டுரை உங்களை வியப்பில் ஆழ்த்தினால்
மனதிற்கும், அறிவிற்கும்- பல்வேறுமத அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில், பேரளவுபுனைவு (மகத்துவம்) படிப்பிக்கிற போக்கால், தேவைக்கானவைகளைக் கற்க மறுதளிக்கப்படுவதும், தேவையில்லாதவைகளை வலிந்து படிப்பிப்பதும், மன உளைச்சலுக்கான அடிப்படை என்கிற நிலையில்- எளிமையாக உருவாக்கிக் கொள்ள முடிகிற மனஉறுதியும், எளிமையாக அகற்றிக் கொள்ள முடிகிற மன உளைச்சலும் எட்டக்கனிபோல பீற்றிக்கொள்ளப்படுவது, இந்திய மற்றும் தமிழ்இனத்தின் இற்றை நிலையாகும். அதை அகற்றி மகிழும் வகைமைக்கானது இந்தக் கட்டுரை. மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன். மற்ற ஐந்தறிவு உயிரிகள் பெற்றிருக்கிற, ஐந்து அறிவுகளுக்கான புலன்களையும் மனிதன் கொண்டிருக்கிறான். இதை ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்று தனக்கு முந்தைய தமிழ்முன்னோர் நிறுவியுள்ளதாக தொல்காப்பியர் தெரிவிக்கிறார். மேலும், புல்லும் மரனும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிள...