'மந்திரம்' நூல்அறிமுகம் பதிப்புரை: உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த கலையே மந்திரம். என்பதை இந்த நூலின் அடிப்படையாக்கியுள்ளார் நூலாசிரியர். ஆக- இந்த நூலின் நோக்கம் உங்கள் மனதில் மாண்புகளைக் குவிப்பதற்குப் பாடாற்றுவது. அதை இந்த நூல் சிறப்பாகச் செய்யும் என்று உறுதியளிப்பதற்கானதே இந்தப் பதிப்புரை. 'குற்றம் காண்கில் சுற்றம் இல்லை' என்பது, பேரளவினர் அறிந்த, ஒளவையார் பங்களித்த ஒரு பழமொழி. சுற்றத்தை இல்லாமல் செய்துவிடக்கூடியதும், நாம் உறுதியாகக் களைய வேண்டியதும் ஆன, குற்றம் என்கிற தலைப்பிற்கு எதிர்த் தலைப்பு மாண்பு. உங்கள் மனதில் மாண்புகளைக் குவிப்பதற்குப் பாடாற்றுவது என்கிற இந்தநூலின், இந்தக்கரு, நூலாசிரியர் எண்ணத்தில் தோன்றிய போதே அது கடவுளில் பதிவாகிவிட்டது. இந்த நூலை எழுதிமுடிக்க நூலாசிரியருக்குப் பயன்பட்ட, தமிழின் உயிர் பனிரெண்டு, மெய் பதினெட்டு என்கிற முப்பது எழுத்துக்களும், அந்த முப்பது முதலெழுத்துக்கள் உருவாக்கும் 246 உயிர்மெய் எழுத்...
ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது ஆகும். கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டுகால படிப்பை, மந்திரம் இணையவழிக் கல்விக்கூடத்தில் இணைந்து படிக்க முடியும். அதில் 1. கணியம் கலைவளவன் 2. மந்திரம் கலைவளவன் என்கிற இரண்டு வகையான படிப்புகளில் இணைந்து படிக்க முடியும். நீங்கள் விரும்பிய கலைவளவன் படிப்பில் இணைந்து படிக்க, இணைப்பில் சென்று, கிடைக்கும் படிவத்தை உங்கள் செல்பேசி மூலமாகவே தமிழில் நிறைவு செய்து ஒப்படைக்கலாம். அத்துடன் முதலாவது பாடத்திற்கான படிப்புக் கட்டணம் ரூபாய் ஐம்பதை, kumarinadanr@okicici என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு செலுத்தலாம். அப்போது நீங்கள் விரும்பும் ஓராண்டு கலைவளவன் தலைப்பு படிப்பில் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள். நாங்கள் முதல் பாடம் அனுப்பி, அதற்கு நீங்கள் அனுப்பிய விடைக்கு, ஐந்திணைக்கோயிலின், மதிப்பெண் மற்றும் பாராட்டை உங்கள் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பயதும்- முதலாவது பாடத்திற்கான எங்...
யார் எதைக் கேட்டாலும் கொடுப்பதுவே கடவுளின் வேலை என்பதைத் தமிழ்முன்னோர், ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில், தௌிவாக நிறுவியுள்ளனர். இதை நீங்கள் தெளிவாகவும், உறுதியாகவும், புரிந்து கொண்டு, உங்கள் எல்லையில்லாத முன்னேற்றத்திற்கு கடவுளிடம் நிறைய நிறையக் கேட்டுப் பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்திற்கானது ஐந்திணைக்கோயில். கடவுளே! விசும்பு தெய்வமே! என்று விளித்து, அன்றாடம், உங்கள் சின்னத்சின்னத் தேவைகளைத், தெளிவாக உறுதியாக, கேளுங்கள். கடவுள் ஒவ்வொன்றாக நீங்கள் கேட்ட அத்தனையையும் நிறைவேற்றித்தருவதைப் பார்த்து வியந்துபோவீர்கள். உங்களுக்கு கிடைத்த ஒவ்வொன்றுக்கும், கடவுளே! விசும்பு தெய்வமே! என்னுடைய இந்தக் கேட்பை நிறைவேற்றித் தந்தமைக்கு நன்றி! என்று, கடவுள் உங்களுக்காக முன்னெடுத்த முயக்கத்தைப் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்களால், கடவுளில் உங்களுக்கான சொந்த இடம், விரிவடைந்து கொண்டே போகும். அப்புறம் உங்களின் பெரிய பெரிய தேவைகளை எல்லாம், கடவுளிடம் கேட்டுப்பெறுவது மிகமிக எளிதாகிவிடும். உங்களுக்கு மட்டுமேயான, உங்கள் சொந்தக் கடவுளைக், கட்டமைத்துக்கொள்ள, விரிவாகக் கற்றுத்தரும் ந...
கருத்துகள்
கருத்துரையிடுக