நூல்அறிமுகம் வரிசையில்: உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய ஐந்திர (பிரபஞ்ச) மாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்கள்


இந்தச் சிறுநூல், மந்திரத்தை யாரும், கட்டி, ஓதி பயன் பெறும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது. 

நூலின் பெயர்: 
உடல்நலம், மனமகிழ்ச்சி,  செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய  ஐந்திர (பிரபஞ்ச) மாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்கள்

நூல் ஆசிரியர்:
தமிழறிஞர்.குமரிநாடன். மந்திரம் கல்வியாளர்.

வெளியீடு:
ஐந்திணைக்கோயில்
அரசு பதிவுபெற்ற
தமிழர் வாழ்வியல் வகைக்கான கல்விநிறுவனம்
மின்அஞ்சல்: ainthinaikkoyil@gmail.com
செல்பேசி: 9500612859 

நூல்வகைப்பாடு: தமிழர் வாழ்வியல்

நூலின்விலை: ரூ95/-

பதிப்பு: முதல்பதிப்பு: 
17, சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5128
(30.04.2026)
உரிமை: ஆசிரியருக்கே  

பன்னாட்டுத் தரப்புத்தக எண்: 978-81-685265-1-8

பன்னாட்டுத் தரப்புத்தக எண்ணுக்கு பதிவிட்ட நூலின் ஆங்கிலப்பெயர்: Mantras to Greatly Accumulate the Five Cosmic Values: Health, Happiness, Prosperity, Travel Safety, and Essential Connections.

பன்னாட்டுத் தரப்புத்தக எண்ணுக்கு பதிவிட்ட நூலாசிரியரின்  ஆங்கிலப்பெயர்: TAMIL SCHOAR. KUMARINADAN.R


உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, தமிழ்முன்னோர் தந்திட்டக் கலையே மந்திரம்.

இயற்கையின் அனைத்திலும், மறைந்து பொதிந்திருக்கும் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு ஆற்றல்களைக் குறிக்க நான்மறை என்கிற தலைப்பை உருவாக்கியிருந்தனர், தமிழ்முன்னோர்.
அந்த நான்மறைகளும், வெளியில் இயங்கி, வெளிக்கு ஒரு இயக்கம் கொடுத்து, வெளியை விண்வெளி ஆக்குவதும், விண்வெளி- நான்மறைகளிடம் பெற்ற இயக்கவகைக்கு, நான்மறைகளை முயக்கும்போது இயக்கமற்ற வெளியும் முயக்க ஆற்றல் பெற்ற விசும்பு ஆகிவிடுவதால், நான்மறைகளோடு- விசும்பு நிலை எய்திய வெளியும் ஒரு ஆற்றல் ஆகிறது. நிலம் நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்தையும் குறிக்க, ஐந்திரம் என்கிற பொருள் பொதிந்த தலைப்பை உருவாக்கினர் தமிழ்முன்னோர். 

ஆகவே, தமிழ்முன்னோர் கண்டறிந்து நிறுவிய முதன்மை திரங்கள் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு எனும் ஐந்து ஆகும். இந்த ஐந்திரங்களை விரிவாக ஆயும் மொழியான தமிழுக்கு, கால அடிப்படையில் மூன்று பெயர்கள் உண்டு. அவற்றுள், முதலாவது முகிழ்த்தது நாடகத்தமிழ். இரண்டாவது முகிழ்த்தது இசைத்தமிழ். மூன்றாவது முகிழ்த்தது இயற்றமிழ். 

இயற்றமிழில், நிலம், நீர், தீ, காற்று என்கிற சொந்த இயக்கம் உடைய நான்மறைகளைப் பற்றி ஆய்கிற கல்வியை, இயல்அறிவு என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். 

இயல்அறிவு என்பதற்கு நேரான ஆங்கிலச்சொல் சயின்ஸ் ஆகும். 

இயற்றமிழில், விசும்பு என்கிற சொந்த இயக்கம் இல்லாத, நிலம், நீர், தீ, காற்றுக்குக் கடந்தும், உள்ளும் அமைந்து, அவைகளின் இயக்கத்திற்கு அவைகளை முயக்குவதைப் பற்றி ஆய்கிற கல்வியை, இயல்கணக்கு என்று நிறுவினர் தமிழ்முன்னோர். 

இயல்கணக்கு என்கிற சொல்லில், தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருளில், தலைப்பையோ, கல்வியையோ, ஆய்வையோ, உலகில் எந்த இனத்தினரோ, மொழியினரோ இன்றுவரை கொண்டிருக்கவில்லை.
 
அந்த இயல்கணக்கில் 1.காப்பியம் 2.இலக்கியம் 3.நிமித்தகம் 4.கணியம் 5.மந்திரம் என்கிற ஐந்து துறைகள் அல்லது கலைகள் உண்டு. அவற்றுள் மந்திரம் என்கிற கலையை மட்டும் தெளிவுபடுத்துகிற நூல் மந்திரம். 

அந்த மந்திரம் நூலின் ஒற்றைத் தலைப்பான, மந்திரங்கள் கட்டிஓதி  ஐந்திர மாண்புகளைக் குவிப்பது எப்படி? என்கிற கட்டுரையே இந்த முழுநூல் ஆகும்.

1. எழுத்து,சொல் என்று மொழிக்கும், பொருள் என்று வாழ்க்கைக்கும் வகுத்த காப்பு என்கிற அடிப்படையைக் கொண்டது காப்பியம்.

2. அறம் செய விரும்பு என்று ஒவ்வொருவரையும் கட்டாயப்படுத்தும் அடிப்படையைக் கொண்டது இலக்கியம்

3. வெளியில் உலா வருகிற கோள்கள் விண்மீன்களின் இயக்கத்தின் அடிப்படையாக, காலக்கணக்கை உருவாக்கி ஒவ்வொருவரின் பிறந்த நேரத்து கோள்களின் நிலைக்கு குறிப்பு எழுதுவது சாதகம். வாழுங்காலம் முழுவதும் அந்தக் குறிப்பின் அடிப்படையில் நடப்பு வாழ்க்கையை முன்கூட்டியே அறிந்து தெரிவிப்பது சோதிடம். சாதகமும் சோதிடமும் நிமித்தகத்தின் இருபெரும் பகுதிகள்.

4. எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்தின் அடிப்படையாக இருக்கிறது என்கிற கண்டுபிடிப்பின் அடிப்படையாக உருவாக்கப்பட்ட கலை, கணியம். 

5. இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை என்கிற கண்டு பிடிப்பின் அடிப்படையாக, தமிழ்முன்னோரால் நிறுவப்பட்ட ஐந்தாவது முன்னேற்றக்கலையும், நிறைவுக் கலையும் ஆகும் மந்திரம். 

இந்த நூலை அஞ்சல் வழியாகப் பெற விரும்புவோர், 9500612859 என்கிற செல்பேசி எண்ணுக்கு கூகுள்பே, போன்பே போன்ற ஏதாவதொரு பணப்பரிமாற்றச ்செயலி வழியாக புத்தக விலை ரூ95 உடன் அஞ்சல் செலவு ரூ27 சேர்த்து ரூபாய் 122 அனுப்பி வைக்கவும்.

உங்கள் முழு முகவரியை ainthinaikkoyil@gmail.com என்கிற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால், தொகையும் முகவரியும் பெற்ற அதே நாளிலோ, அடுத்த நாளிலோ அஞ்சலில் அனுப்பி வைப்போம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'மந்திரம்' நூல்அறிமுகம்

கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டு படிப்பு

யார் எதைக் கேட்டாலும் கொடுப்பதுவே கடவுளின் வேலை!