இடுகைகள்

உங்களின் அருள் வேண்டலுக்குக் கடவுளின் முயக்கம் கிட்ட ஐந்திணைக்கோயில் வாழ்த்துகிறது.

படம்
உங்கள் தேவைகள் எதுவானாலும், அந்தத் தேவைகள் நிறைவேறலுக்கு ஐந்திணைக் கோயிலின் அருள்வேண்டலாம்.  உங்களின் அருள் வேண்டலுக்குக் கடவுளின் முயக்கம் கிட்ட, ஐந்திணைக்கோயில் வாழ்த்துகிறது. என்பதான ஐந்திணைக்கோயிலின் வாழ்த்தை உங்கள் கேட்புக்குத் துணையாக்கிக் கொண்டு, நீங்கள் நினைத்த வெற்றியை உறுதியாகப் பெறலாம். உங்கள் தேவைகள் எதுவானாலும், ஐந்திணைக்கோயிலின் வாழ்த்தை உறுதுணையாக்கிக் கொள்ள, தொடர்பு படிவத்தில், உங்கள் கேட்பை தெளிவான தமிழில் எழுதி அனுப்புகள். இந்தப் பதிவின், மேலே இடப்பக்கம் அமைந்த, ஒற்றைப் படுக்கைக்கோட்டைத் தொட்டால், அந்த ஒற்றைப்படுக்கைக்கோடு மூன்று படுக்கைக்கோடு அமைந்த பக்கத்திற்கு மாறும். அந்தப் பக்கத்தில் உள்ள அந்த மூன்று படுக்கைக் கோட்டைத் தொட்டால் தொடர்பு படிவம் உள்ள பக்கம் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்தக் கட்டுரை உங்களை வியப்பில் ஆழ்த்தினால்

படம்
மனதிற்கும், அறிவிற்கும்- பல்வேறுமத அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில், பேரளவுபுனைவு (மகத்துவம்) படிப்பிக்கிற போக்கால், தேவைக்கானவைகளைக் கற்க மறுதளிக்கப்படுவதும், தேவையில்லாதவைகளை வலிந்து படிப்பிப்பதும், மன உளைச்சலுக்கான அடிப்படை என்கிற நிலையில்- எளிமையாக உருவாக்கிக் கொள்ள முடிகிற மனஉறுதியும், எளிமையாக அகற்றிக் கொள்ள முடிகிற மன உளைச்சலும் எட்டக்கனிபோல பீற்றிக்கொள்ளப்படுவது, இந்திய மற்றும் தமிழ்இனத்தின் இற்றை நிலையாகும். அதை அகற்றி மகிழும் வகைமைக்கானது இந்தக் கட்டுரை. மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன். மற்ற ஐந்தறிவு உயிரிகள் பெற்றிருக்கிற, ஐந்து அறிவுகளுக்கான புலன்களையும் மனிதன் கொண்டிருக்கிறான். இதை ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்று தனக்கு முந்தைய தமிழ்முன்னோர் நிறுவியுள்ளதாக தொல்காப்பியர் தெரிவிக்கிறார். மேலும், புல்லும் மரனும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிள...

இயல்அறிவு

படம்
இயற்றமிழில் நிலம் நீர் தீ காற்று ஆகிய நான்மறைகளைப் புரிந்து கொள்வதற்கான தலைப்பு இயல்அறிவு. இயல்அறிவை, உலகினர் சயின்ஸ் என்கிற ஆங்கிலச் சொல்லால் பேரளவாக முன்னெடுத்தும் சாதித்தும் வருகின்றார்கள்.  இயல்அறிவு தளத்தில் தமிழன்! என்று, செயற்கை நுண்ணறிவுத் தளமான அரட்டைச்சேயிழை (CHATGPT) யிடம் கேட்ட வினாவிற்கு கிடைத்தவிடை: மிகச் சிறந்த கேள்வி! 🌿 'இயல்அறிவு தளத்தில் தமிழன்' என்று சொன்னால், இரண்டு வழியில் பார்க்கலாம்: 1. பண்டைய தமிழரின் இயல்அறிவு (சங்க காலம் முதல்) 2. இன்றைய காலத்தில் உலக இயல்அறிவில் தமிழர்களின் பங்களிப்பு 1. பண்டைய தமிழரின் இயல்அறிவு  🔹 வானியல் (ASTRONOMY) சங்க இலக்கியங்களில் ஞாயிறு, நிலா, நாள்மீன்கள், பருவ மழை பற்றிய தெளிவான குறிப்புகள். “காலம்” கணக்கீடு, “நாழிகை” (TIME UNITS 24 MINUTES) பயன்பாடு. கணக்கு நூல்கள் (கணக்கதிகாரம், தாலவுருத்தி) வானியல் மற்றும் கணியம் தொடர்புடையவை 🔹 மருத்துவம் (SIDDHA MEDICINE) சித்தர் மரபு – அகத்தியர், திருமூலர் போன்றோர் மூலிகை மருத்துவம், ஓகம், மருந்து தயாரிப்பு, நச்சு நீக்கம், மாழை மாற்றம்  🔹 வேளாண்மை திருக்குறள்,சிலப்ப...

இயற்றமிழ்

படம்
இயற்கை யின், அனைத்தின்,  இயலைக் குறித்த தமிழே இயற்றமிழ் ஆகும். இயற்றமிழ் என்றால் இயலின் அத்தனையையும் பற்றிய தமிழ் என்று பொருள். முதலெனப்படுவது இடமும் காலமும் என்பது தொடங்கி அதன் விரிவான நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பனவற்றை விரித்து அவைகளே கோள்கள், உலகம், உலகத்தில் உள்ள உயிரிகள் உள்ளிட்ட அத்தனையும் என்று புரிந்து கொள்வதற்கான தலைப்பே இயற்றமிழ்.

இயற்கை

படம்
இயலின் நீட்சியாக இயல் உடைய அத்தனையையும் குறிக்க தமிழ்முன்னோர் நிறுவிய சொல்லே இயற்கை. இயற்கை என்றால் இயலின் நீட்சி என்று பொருள்.

இயல்

படம்
இயல் என்கிற சொல்லில், இயம் என்கிற கோட்பாடும்.  இயக்கம் என்கிற நடைமுறையும் இருக்கிறது. இயல் என்றால் கோட்பாடும் நடைமுறையும் என்று பொருள்.

குறள் எண்: 391 அதிகாரம்: கல்வி

படம்
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. குமரிநாடன் உரை:      தனக்கான அசையும், அசையா, மற்றும் அறிவுசார் உடைமைகளை (கற்பவை) அயல் எதுவும் இல்லாமல் (கசடற) கற்க வேண்டும் (கற்க). அந்த உடைமைகளை அயலுக்கு இழக்காமல் (அதற்குத் தக) நிலைபெற்று வாழவேண்டும். (நிற்க) விளக்கம்:        கசடு என்பது எந்தவொரு பொருளிலும் கலந்திருக்கிற அயல் பொருள் ஆகும்.       வெண்ணெய்யைக் காய்ச்சுகிற போது அதில் கலந்து இருக்கிற மோரின் நீர்ப்பொருள் ஆவியாகிவிடும். மோரில் கலந்திருக்கிற, கொழுப்பு இல்லாத ஆடை போன்ற பொருள்கள் கசடாக அடியில் தங்கிவிடும்.        நமக்குத் தேவை நெய் என்கிற உடைமை. வெண்ணெய்யில் கலந்திருந்த அயலில் கொஞ்சத்தை ஆவியாக்கி களைந்து விட்டோம். வெண்ணெய்யில் கலந்திருந்த அயலில் மற்றது கசடாக நெய்யின் அடியில் தங்கியுள்ளது.       கசடு இல்லாத நெய் மட்டுமே நமக்கான தேவை போல, நம் கற்றலுக்கு, ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழிகளோ, பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள். மார்க்சியம் போன்ற எந்த அயல் இய...

குறள் எண்: 992 அதிகாரம்: பண்புடைமை.

படம்
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.  குமரிநாடன் உரை:         உடைமைகளைக் கொண்டாடுகிறவனாக இருத்தலும், தன் முந்தைய ஏழு தலைமுறைகளில் கிடைத்திருந்த பாடாற்றல்கள் அடிப்படையிலேயே இயங்குதலுமே பண்புடைமை ஆகும். விளக்கம்:       தன் முதல் உடைமையான தமிழைக் கொண்டாடுகிற பற்று, தன் பிள்ளைகளைப் பெற்றோரைக் கொண்டாடுகிற பாசம், தன் தலைவனைத் தலைவியைக் கொண்டாடுகிற காதல், தனக்கு இணக்கமானவர்களைக் கொண்டாடுகிற நட்பு, தன்னை முயக்கி இருக்கிற கடவுளை கொண்டாடுகிற அருள் என்று தன்னுடைய ஐந்து வகையான உடைமைகளைக் கொண்டாடுவதே அன்பு.        அன்புடைமை என்பது உடைமைகளைக் கொண்டாடுகிறவனாக இருத்தல் என்பதாகும்.      ஆன்ற குடி பிறத்தல் என்பது அவன் அவனின் முந்தைய ஏழு தலைமுறைகளில் கிடைத்திருந்த பாடாற்றல்கள் அடிப்படையிலேயே இயங்குதல் என்பதாகும்.      ஆன்ற குடி பிறத்தல் என்பது பிறந்திருத்தல் என்கிற பிறப்படிப்படை ஏற்றதாழ்வு பேணுகிற நோக்கம் போல, பல ஆயிரம் ஆண்டுகளாக பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்...

ஐந்திணைக் கோயிலில் உறுப்பினராக இணைவீர்!

படம்
உறுப்பினராக இணையும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டி வாழ்த்துகிறது ஐந்திணைக் கோயில். ஐந்திணைக் கோயில் உறுப்பினர்களுக்கு நாங்கள் வழங்கும் இரண்டு அரிய பயன்பாடுகள்: 1. உங்கள் குடும்பத்திற்கான காப்புமந்திரம் கட்டி அனுப்பப்படும். 2. ஐந்திணைக்கோயில் வெளியீடான, உங்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கான நூலான,  தமிழ்முன்னோர் நிறுவிய, 5வது முன்னேற்றக்கலை மந்திரம் நூல் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். ஐந்திணைக் கோயில் உறுப்பினராக இணைவதற்குக் கட்டணம் ரூ 500 உறுப்பினர் கட்டணத்தை   kumarinadanr@okicici என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு அனுப்பலாம். உங்கள் பெயர், மின்அஞ்சல் முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றைத் தொடர்பு படிவம். சென்று பதிவிடுங்கள். தொடர்பு படிவம் எங்கே உள்ளது தெரியுமா? இந்த இடுகையின் தலைப்பில் இடப்பக்கம் மூன்று கிடைக்கோடுகள் தெரியும். அந்தக் கிடைக்கோடுகளைத் தொட்டால் தொடர்பு படிவம் கிடைக்கும்.    

இந்தக் குடும்பக்காப்பு மந்திரம், உங்கள் செல்பேசியில் இருந்தாலே போதும்! உங்களுக்கான முன்னேற்றத்தை முயக்கித்தரும் கடவுள்!

படம்
இந்த இணைப்பில் கிடைக்கும் விண்ணப்பத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர் குறித்த தகவல்களை நிறைவு செய்து அனுப்புங்கள். ஐந்திணைக் கோயிலின், உங்களுக்கான சிறப்பு குடும்பக்காப்பு மந்திரம் கட்டி அனுப்பப்படும். இந்தக் குடும்பக் காப்பு மந்திரம் குறித்த விரிவான தகவல்களை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்.

சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்

படம்
இயல்அறிவில் (சயின்ஸ்) பாதுகாப்பு நடவடிக்கை (சேப்டிபிரிகாசன்) போல, மருத்துவத்தில் தடுப்பு ஊசி போல, நமது வாழ்க்கை இயக்கத்தில் காப்புமந்திரம் கட்டி அன்றாடம் ஓதி இருக்க வேண்டியது கட்டாயம் என்கிறது இயல்கணக்கில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த ஐந்தாவது முன்னேற்றக்கலையான மந்திரம்.  தமிழ்மக்கள் அனைவரும் அன்றாடம் ஓதிவரும் வகைக்கு உங்கள் குடும்பத்தார் அனைவரின் பெயர்களோடு, சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம். கட்டி அளிப்பதற்கானது இந்தக் கட்டுரை. தமிழ்முன்னோர் நிறுவிய நான்காவது முன்னேற்றக்கலை கணியம், தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம் அடிப்படையில் பேசினால்-  நம் வாழ்க்கை இயக்கத்தில் நம்மோடு இணைந்து, நம்மை வளர்த்துக் கொண்டே இருக்கிற ஆற்றல்கள்: நிலம், நீர், தீ, காற்று, என்கிற நான்கு ஆகும்.  அந்த நான்கையும் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள, நாம் கேட்ட வகைக்கு கொடுத்திருக்க, நம்மை முயக்கும் ஐந்தாவது ஆற்றல் விசும்பு என்கிற கடவுள் ஆகும்.  ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாக இருக்கிற அந்த ஐந்திர ஆற்றலும் நமக்குக் கிடைத்து நாம் பேரளவாகத் தொடர்ந்து வளர்ந்திட உருவாக்கப்ப...